செய்திகள்,முதன்மை செய்திகள் மூன்று வயது சிறுவன் மீது வழக்கு பதிவு …

மூன்று வயது சிறுவன் மீது வழக்கு பதிவு …

மூன்று வயது சிறுவன் மீது வழக்கு பதிவு … post thumbnail image
லாகூர்:-பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் மாவட்டத்தில் வசித்துவரும் முகமது பரூக் என்பவர் உள்ளூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், பரூக் பீபி என்ற பெண்ணும் அவருடைய மகன் சாட் என்பவனும் சிறு கத்தியால் தன்னைத் தாக்கி தன்னிடமிருந்த செல்போனையும், 22,000 ரூபாய் ரொக்கத்தையும் பறித்துக் கொண்டு ஓடிவிட்டதாக கூறியிருந்தார். இவரது குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

நேற்று தனது வக்கீல் மூலமாக இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கோரி ஒரு மனு தாக்கல் செய்த பரூக் பீபி, தனது மகன் மீது போடப்பட்டுள்ள எப்.ஐ.ஆர். போலியானது என்று வாதிட்டார். மூன்று வயதே நிரம்பிய தனது கட்சிக்காரரின் மகன் எவ்வாறு இத்தகைய குற்றங்களில் ஈடுபடமுடியும்? என்று அவரது வக்கீல் முல்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். லஞ்சம் பெற்றுக்கொண்டே காவல்துறையினர் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதாகவும் பரூக் பீபி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஷபாஸ் அலி பராச்சா, அவருக்கு ஜாமீன் வழங்கினார். மேலும் சிறுவனது பெயரை அந்த வழக்கிலிருந்து நீக்குமாறும் அவர் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் வரும் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி