அன்னக்கொடி படத்துக்குப் பிறகு நடித்து வரும் படம் “13”. அதில் இரண்டு மகள்களுக்கு தந்தையாக நடிக்கிறார் மனோஜ்.
பேய், ஆவி சம்பந்தப்பட்ட படங்களுக்கே “13” என்று பெயர் வைப்பார்கள். “13” சைத்தானின் எண் என்பது மேற்குலக நம்பிக்கை. 13 என்றால் அவர்களுக்கு அத்தனை அலர்ஜி. தமிழில் “13”ஆம் நம்பர் வீடு என்ற “ஹாரர்” படம் வெளியானது நினைவிருக்கலாம்.
அந்த நம்பிக்கைகளை உடைக்கும் விதமாக தந்தை மகன் பாசத்தை மையமாக வைத்து மனோஜ் பாரதி நடிக்கும் 13 உருவாகி வருகிறது. இப்படத்தில் மனோஜுக்கு ஜோடியாக சங்கீதா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுக்கு இரு மகள்கள் இருப்பதாக கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. மனோஜ் இதில் சாஃப்ட்வேர் என்ஜினியராக நடித்து வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி