இந்த ஆந்தையை 20–க்கும் மேற்பட்ட காக்கைகள் விரட்டின. பகலில் கண்பார்வை தெரியாதநிலையில் ஆந்தை திக்குமுக்காடியது.இப்பகுதியில் உள்ள மீனா என்பவரது வீட்டிற்குள் புகுந்து கதவிடுக்கில் பதுங்கி கொண்டது. வித்தியாசமான இந்த ஆந்தையை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக பார்த்து சென்றனர். பின்னர் போடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்த வனத்துறையினர் ஆந்தையை பிடிக்க எந்தவித உபகரணமும் கொண்டுவரவில்லை. பொதுமக்களையே பிடித்து தர கூறினர்.எனவே பொதுமக்கள் பிடிக்க முயன்ற போது ஆந்தை மீண்டும் வெளியே பறந்தது. இதைக்கண்ட காக்கைகள் விரட்டிச்சென்று ஆந்தையை கொத்தின. இதில் ஆந்தைக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு புதர் பகுதியில் மயங்கி விழுந்து இறந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி