செய்திகள்,முதன்மை செய்திகள் போலீசாக நடித்து பைக் திருடியவர் கைது …

போலீசாக நடித்து பைக் திருடியவர் கைது …

போலீசாக நடித்து பைக் திருடியவர் கைது … post thumbnail image
திருப்பூர்ரூரல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வருபவர்களின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.அந்த வாகனங்களை தாராபுரம் ரோடு அருகே உள்ள டூ வீலர் ஸ்டேண்டிலும், செட்டிப்பாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள டூ வீலர் ஸ்டேண்டிலும் நிறுத்தி வைத்தனர்.

போலீசாரின் நடவடிக்கைககளை கவனித்த ‘வாடிப்பட்டி’ அருகே உள்ள சின்னமச்சிக்குளம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற சித்திரை கண்ணன் (வயது 25) அந்த மோட்டார் சைக்கிளை அபகரிக்க திட்டமிட்டார். அதன்படி போலீஸ் போல போலி அடையாள அட்டை தயாரித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாராபுரம் அருகேயுள்ள டூ வீலர் ஸ்டேண்டுக்கு சென்றார்.

அங்கு இருந்த பாதுகாப்பு ஊழியரிடம் தன்னை போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டை திருடிச் சென்று விட்டார். அடுத்த நாள் செட்டிப்பாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள டூ வீலர் ஸ்டேண்டில் இருந்த வேணுகோபால் என்பவரிடம் தன்னை போலீஸ் என அறிமுகம் செய்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளை திருட முயன்றார். அவர் மீது வேணுகோபாலுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இது குறித்து அவர் திருப்பூர் ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோட்டார் சைக்கிளை திருடி செல்ல முயன்ற வாலிபரை கையும் களவுமாக கைது செய்தனர்.மேலும் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் அவர் ஈடுபட்டு உள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி