நகர கவர்னரான ஆண்ட்ரூ குயோமோ நேற்று நியூயார்க்கில் அவசரநிலைப் பிரகடனம் செய்துள்ளார். இதன்மூலம் மாநில அளவில் மட்டுமே பயன்படுத்தப்படும் அரசாங்க வளங்கள் விரைந்து நகர மக்களுக்கு உதவி புரியும் வகையில் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கவர்னர் நிறுத்தி வைக்கமுடியும். இந்த அவசரகால உதவிகளைத் தவிர்த்து மக்கள் பனிப்புயலின் தாக்கம் குறையும்வரை எங்கும் வெளியிடங்களுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே இருக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நியூயார்க்கில் உள்ள நான்கு விமான நிலையங்களும் பொதுமக்களின் உபயோகத்திற்காகத் திறந்திருந்தன. ஆனால், நேற்று பிற்பகல் வரை 412 விமான சேவைகள் குறைக்கப்பட்டிருந்தன. விமான ஒடுதளங்களிலும், விமான நிலையத்திற்கு வரும் பாதைகளிலும் பனி சூழ்ந்து போக்குவரத்து தடைப்படாமல் இருக்க விமான நிலைய ஊழியர்கள் பனி எதிர்ப்பு ரசாயனங்களைத் தூவினர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் தங்க நேரிட்ட பயணிகளுக்குத் தேவையான வசதிகளும் விமான நிலையங்களில் செய்து கொடுக்கப்பட்டன.
நியூயார்க் நகரின் பெருநகரப் போக்குவரத்து ஆணையம் தங்களுடைய ஊழியர்களையும், பயணிகளையும் பாதுகாக்கும் நோக்கில் சில பேருந்துகளையும், ரயில் சேவைகளையும் நிறுத்த இருப்பதாகத் தெரிவித்தது. அந்நகரின் போக்குவரத்து ஆணையமும், மாநில நெடுஞ்சாலைப் போக்குவரத்தும் மாநிலம் முழுவதும் சாலைகளில் சேரும் பனியை அப்புறப்படுத்தத் தேவையான கருவிகளும், சாலைகளில் போடுவதற்குத் தேவையான உப்பும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி