சென்னை தரமணி பெரியார் நகரை சேர்ந்தவர் பிரியா (வயது 23). இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த பிரியா, சாப்பிட்டு விட்டு தனது அறையில் சென்று தூங்கினார். அறையின் ஜன்னல் ஓரம் அவர் படுத்து இருந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமி, பிரியாவின் முகத்தில் திராவகத்தை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டார். வலியால் அலறி துடித்த பிரியாவை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். திராவகம் பட்டதில் அவரது கண் அருகே படுகாயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தரமணி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியா மீது திராவகம் வீசிய மர்மநபர் யார்? எதற்காக வீசினார்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி