இந்நிலையில் ரம்யா, நேற்று திருவேற்காடு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது தந்தை சார்லஸ் கப்பல் படையில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவர் வீட்டில் வைத்து மது அருந்தி கொண்டும், டி.வி.யில் ஆபாச படங்களை பார்த்துக் கொண்டே இருப்பார்.அப்போது குடிபோதையில் பெற்ற மகளையே ஆபாசமாக பார்க்கிறார். இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறி இருந்தார்.
இதைத்தொடர்ந்து திருவேற்காடு போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சார்லசை கைது செய்தனர்.பின்னர் அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி