“பாண்டியநாடு” படத்தில் விஷால் ஜோடியாக நடித்தார் நடிகை லட்சுமி மேனன்.அவர் மீண்டும் விஷால் ஜோடியாக “நான் சிவப்பு மனிதன்” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து 2 படங்களில் விஷாலுடன் ஜோடியாக நடிப்பதால் இருவருக்கும் காதல் என்று கோலிவுட்டில் கிசுகிசு எழுந்தது. அதை இருவருமே மறுத்து வந்தனர்.
இதுவரை குடும்பபாங்காக நடித்து வந்த லட்சுமி மேனன் சக ஹீரோயின்களின் போட்டியை சமாளிக்க கிளாமர் வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். ‘நான் சிவப்பு மனிதன்‘ படத்தில் கிளாமர் நடிப்புக்கு மாறி இருக்கிறார். கவர்ச்சியான உடைகள் அணிந்து பாடல்கள் காட்சிகளில் நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய காட்சியொன்றில் விஷாலுடன் உதட்டோடு உதடு ஒட்டும் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் திரு கேட்டபோது முதலில் மறுத்தார். பின்னர் காட்சியின் தன்மையை விளக்கியபோது ஏற்றுக்கொண்டார். லிப் டு லிப் காட்சியாக இருந்தாலும் அதை ஆபாசமில்லாமல் படமாக்க உள்ளதாக இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி