எஸ்.பி.ஜனநாதன், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, இயக்கும் ‘புறம்போக்கு’ படத்தில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணை நாயகர்களாக நடிக்கின்றனர்.
அவர்களோடு, இப்போது புதிதாக அந்த படத்தில், ஆர்யா-விஜய் சேதுபதியுடன் ”ஷாம்” இணைகிறார். அதுவும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறாராம். ஏற்கெனவே எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘இயற்கை’ படத்திலும் நடித்தவர் ஷாம். அதை தொடர்ந்து இப்படத்திலும் ஒப்பந்தம்மாகியுள்ளார். படத்தில் மூன்று பேர் முக்கிய கதாபாத்திரங்களில் மூன்று கதாநாயகர்கள் நடித்தாலும் நாயகியாக நடிப்பது என்னவோ கார்த்திகா மட்டும்தான்.
பொங்கல் ஜனவரி 14ம் தேதி அன்று, படப்பிடிப்பு “குல்லு மனாலி”யில் தொடங்க உள்ளது.அதை, தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், பிகானீர், பொக்ரான், ஜெய்சல்மீர் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி