அமெரிக்காவின் “க்ளீவ்லாந்து” பகுதியைச் சேர்ந்தவர் இலியாஸ் அசிவிடோ(49). இவரது மீது 2 பெண்களை கொலை செய்தது, குழந்தைகளை அடித்து தாக்கியதுடன் பாலியல் பலாத்காரம் செய்தது உள்ளிட்ட 297 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அசிவிடோ, 1993ம் ஆண்டு தனது மனைவியின் சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தனது 3 மகள்களையும் பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்துள்ளார். 1994ம் ஆண்டு தனது பக்கத்து வீட்டுக்காரரான பமீலா என்பவரையும், 1995ம் ஆண்டு கர்ப்பிணி பெண்ணாக இருந்த 18 வயது கிறிஸ்டினா அட்கின்ஸ் என்பவரையும் கொலை செய்துள்ளார். தனது குற்றங்களை ஒப்புக் கொண்ட அசிவிடோவிற்கு இரட்டை கொலைக்காக இரண்டு 20 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும் மற்ற குற்றங்களுக்கு 445 ஆண்டுகள் வெளியில் வர முடியாத சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி