அதனால் கமல் மாதிரி முன்னணி நடிகர்கள் நடித்தால் படத்தை பிரமாண்டமாக்கி பெரிய தொகையை எடுத்து விடலாம் என்று அவரை அணுகியுள்ளார்களாம். விஸ்வரூபம்-2 வந்த பிறகுதான் எதையுமே சொல்ல முடியும் என்று கூறி விட்டாராம்.இந்நிலையில், இந்த படம் கமலிடம் சென்று விட்ட தகவலை அறிந்த மீனா, மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த தான் தமிழில், கமலுக்கும் ஜோடியாக நடித்து விட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே அவ்வை சண்முகி படத்தில் கமலுடன் நடித்தவர் என்பதால், தான் அவருடன் நடிக்க தகுதி உள்ள நடிகைதான் என்பதால் சம்பந்தப்பட்டவர்களை அணுகி, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளாராம மீனா.ஒருவேளை, கமல் மறுத்தால் பசுபதியை வைத்து படத்த இயக்குவோம் என்று மீனாவிடம் சொன்னபோது, அதனாலென்ன அவருடனும் குசேலன் படத்தில் நடித்திருக்கிறேனே என்றும் தமிழில் எந்த நடிகரை வைத்து இயக்கினாலும் ஹீரோயினி வாய்ப்பு எனக்குத்தான் தர வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டு வைத்திருக்கிறாராம் மீனா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி