ஒரு கட்டு இளசான அருகம்புல்லைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறு துண்டு இஞ்சி, பனங்கற்கண்டு 2 டீஸ்பூன், தண்ணீர் ஊற்றி மெல்லிதாக அரைக்கவும். அரைத்த பிறகு அதை வடிகட்டி எலுமிச்சைச்சாறு 1/2 டீஸ்பூன், தேன் ஒரு கரண்டி, உப்பு 1/2 சிட்டிகை. இத்துடன் ஐஸ் சேர்த்துப் பருகவும். இதை தொடர்ந்து பருகினால் பப்பாளிப் பழம் போல பளபளக்கும் சருமம் பெறலாம்.
சுவையான கொள்ளு ரசம் :
100 கிராம் கொள்ளை வெறும் கடாயில் வறுத்து, 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதில் 3 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைத்து, தண்ணீரை இறுத்து வைக்கவும். கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு 1டீஸ்பூன், சீரகம் 1டீஸ்பூன், உளுந்து1டீஸ்பூன், போட்டு தாளிக்கவும்.
சிறிதளவு கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் கால் டீஸ்பூன், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் 2 சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயத்தையும் மஞ்சள் தூளையும் கால் டீஸ்பூன், சேர்த்து வதக்கி, கொள்ளு வேக வைத்த தண்ணீரை சேர்த்து, தேவைப்பட்டால் இன்னும் அரை டம்ளர் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிக்கத் துவங்கியதும், பொடியாக நறுக்கி வைத்துள்ள ஒரு தக்காளி, உப்பு தேவைக்கேற்ப , ரசப்பொடி1 டீஸ்பூன், சேர்த்து நுரைத்து வரும் போது, அடுப்பை அணைக்கவும். ஆறியதும் 1 டீஸ்பூன்,எலுமிச்சைச் சாறு சேர்த்து, சிறிதளவு கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி