தமிழில் யூத்புல் கதாநாயகியாக மட்டுமே நடித்து வரும் அமலாபால், தாய்மொழியான மலையாளத்தில் மெச்சூரிட்டியான வேடங்கள் என்றாலும் விடுவதில்லை. அந்த வகையில், மலையாளத்தில் ஒரு படத்தில் இரண்டரை வயது குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார் அமலாபால்.
அப்படம் வெற்றி பெற்றிருப்பதால், அதேபோன்று மெச்சூரிட்டியான வேடங்கள் நிறைய அமலாபாலை முற்றுகையிட்டுக்கொண்டிருக்கிறதாம். அதனால், தமிழிலும் பிசியாக இருக்கும் அமலாபால், அடுத்தடுத்து மாறுபட்ட கதாநாயகி வேடங்களாக மலையாளத்தில் ஓ.கே செய்து கொண்டிருக்கிறாராம். அதிலும் அடுத்தடுத்து விருது இயக்குனர்கள் சிலரது படங்களும் அமலாவுக்கு கிடைத்திருப்பதால், எதிர்காலத்தில் விருது வாங்க வேண்டும் என்கிற ஆசையும் அவருக்கு மேலோங்கியுள்ளதாம்.
அதனால், இதற்கு முன்பு நரைமுடி கதாநாயகர்களுடன் நடிக்க தயங்கி நின்ற அமலாபால், இப்போது மம்மூட்டி, மோகன்லால் போன்ற ஹீரோக்களுடனான வாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்டு வருகிறாராம்.
Tags »
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி