திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களது மகன் அருண்குமார் (வயது 17). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் வேலை செய்யும் போது மிஷினுக்குள் அவரது கை சிக்கி 4 விரல்கள் துண்டானது. அவரை மதுரை பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அவரின் தாயார் முருகேஸ்வரி திருமங்கலம் டவுன் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில் “நிறுவன ஊழியர்களுக்கு கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களை வழங்காத நிறுவனத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் நிறுவன உரிமையாளர் சுப்புராஜ், மேலாளர் செல்வம், ரகுநாதராஜ் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி