மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ள மாணவி ஜோதிமணியுடன் அவரது தந்தையும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த ஜோதிமணியின் தந்தை மோகன் ராஜ் தற்போது அதிலிருந்து மீண்டு மனிதனாக வாழ்கின்றார். “என் அப்பா குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த போது என் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டடது. இதே போல குடிப்பழக்கத்தால் எத்தனையோ குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. இதனை ஒழிக்க வேண்டும் அதற்காகவே நான் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளேன்” என்று மாணவி ஜோதிமணி கூறியுள்ளார்.
மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினியைத் தொடர்ந்து 4ஆம் வகுப்பு மாணவி உண்ணாவிரதத்தில் களமிறங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி