செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் அஜீத்தின் “வீருடொக்கடே”!!!

அஜீத்தின் “வீருடொக்கடே”!!!

அஜீத்தின் “வீருடொக்கடே”!!! post thumbnail image
அஜீத், தமன்னா, விதார்த், பாலா, சந்தானம் நடிக்கும் வீரம் படம், தெலுங்கில் “வீருடொக்கடே” என்ற பெயரில் டப் செய்யப்படுகிறது. இதன் டப்பிங் பணிகளும் தெலுங்கு பாடல்களை உருவாக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனு பாபு கூறியிருப்பதாவது. “பழம்பெரும் நிறுவனமான விஜயா புரொடக்ஷனின் நிறுவனர் நாகி ரெட்டியின் நூற்றாண்டில் இந்தப் படம் ரிலீசாவதால் தெலுங்கு மக்கள் பெரிதும் வரவேற்க காத்திருக்கிறார்கள்.

இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தெலுங்கு பாடல்களை பிரமாதமாக கொடுத்திருக்கிறார். ஜனவரி முதல் வாரத்தில் அதனை வெளியிடுகிறோம். படத்தையும் ஜனவரி மாதத்திலேயே வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

ஏற்கெனவே ஆரம்பம் படம் தெலுங்கில் பெரிய ஹிட்டானதால் அஜீத்துக்கு தெலுங்கிலும் பெரிய ரசிகர் வட்டம் உருவாகி உள்ளது. சொர்னயம், தரவு படங்களின் மூலம் தெலுங்கில் கமர்ஷியல் டைரக்டராக பெயர் எடுத்துள்ள சிவா இயக்கி இருப்பதால் இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி