திரையுலகம்,முதன்மை செய்திகள் பாலியல் குற்றச்சாட்டுக்கு நடிகையின் கருத்து…

பாலியல் குற்றச்சாட்டுக்கு நடிகையின் கருத்து…

பாலியல் குற்றச்சாட்டுக்கு நடிகையின் கருத்து… post thumbnail image
சினிமாக்களில் இடம்பெறும் கலவரம் மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் சமுதாயத்தை கெடுக்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் சிலர் அவ்வப்போது சாடுவதுண்டு. ஆனால், அதே கருத்தை ஒரு சினிமா நடிகையே தெரிவிக்கிறார் என்றால் ஆச்சர்யமாக உள்ளதல்லவா?

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, நாட்டில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக நடப்பதற்கு சினிமாவே காரணம் என்று கூறியிருக்கிறார். சமீபகாலமாக தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் இளவட்ட ரசிகர்களின் உணர்ச்சிகளை தூண்டி விடும் வகையில் படங்களில் ஆபாச காட்சிகள் அதிகமாக புகுத்தி வருகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அஜந்தா எல்லோரா மற்றும் கஜுரேகா சிற்பங்களை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.ஆனால், இதற்கு பாலிவுட் சினிமாவிலிருந்து இன்னமும் எதிர்ப்போ, ஆதரவோ எழும்பாத நிலையில், நம்ம ஊர் நடிகையான குஷ்பூவே வழக்கம்போல் முதல் நபராக கருத்து கூறியிருக்கிறார்.

அதாவது, சினிமாதான் நாட்டில் நடக்கும் செக்ஸ் சம்பவங்களுக்கு காரணம் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏதாவது ஒரு கதையை மையமாக வைத்தே படங்கள் உருவாகின்றன.

எந்தவொரு படத்திலும் கற்பழிக்க வேண்டுமென்று உணர்ச்சிகளை தூண்டிவிடும் வகையில் காட்சிகள் அமைக்கப்படுவதில்லை. அதோடு,ஒரு படம் உருவானதும், அது மக்கள் பார்ப்பதற்கு தகுதியானது என்பதற்கு ஆதாரமாக சென்சார்போர்டு சான்றிதழ் அளித்த பிறகுதான் அந்த படமே வெளியே வருகிறது.

இப்படி சொல்லும் குஷ்பூ, ஒன்றரை வயசு பச்சிழங்குழந்தை முதல் 60 வயது கிழவிகள் வரை நாட்டில் கற்பழிக்கப்பட்டு வருகிறார்கள். இதையெல்லாம் எந்த சினிமாவில் சொல்லிக்கொடுத்தார்கள். இருப்பினும் ஒரு சினிமா நடிகையே இப்படியொரு கருத்து சொல்லியிருப்பது ஆச்சர்யமாக உள்ளது என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி