திரையுலகம்,முதன்மை செய்திகள் அதிரடிக்கு மாறும் நயன்தாரா…

அதிரடிக்கு மாறும் நயன்தாரா…

அதிரடிக்கு மாறும் நயன்தாரா… post thumbnail image
காதல், கவர்ச்சி, அழுத்தமான நடிப்பு என பல பரிமாணங்களைக் காட்டிய நயன்தாரா அடுத்து அதிரடி நாயகியாக நடிக்கிறார்.

நயன்தாராவும் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் படத்தில் ஆக்ஷன் நாயகியாக அவதாரம் எடுக்கிறார். இந்த படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் ஜெயம்ரவி ஹாக்கி விளையாட்டு வீரராக வருகிறார். நயன்தாரா கராத்தே மாஸ்டராக நடிக்கிறார்.

இதற்காக நயன்தாரா கராத்தே பயிற்சியெல்லாம் எடுத்துள்ளாராம். காதல் காட்சிகளில் ஜெயம் ரவியுடன் புரள்வதோடு, ஆக்ஷன் காட்சிகளில் வில்லன்களைப் புரட்டி எடுக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி