3 படத்தின் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா தனுஷ். தனுஷ்-ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்திருந்த அப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. இருந்தாலும், ஐஸ்வர்யாவுக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. அடுத்து உடனடியாக வை ராஜா வை என்ற படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றார்.
முதல் படத்தை விட இரண்டாவது படத்தை ஹிட் கொடுக்க வேண்டும் என்று கவனமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தனது தங்கை செளந்தர்யா, அப்பா ரஜினியை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கி விட்டதால், ஐஸ்வர்யாவுக்கும் அப்பாவை வைத்து ஒரு மெகா படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம்.
ஏற்கனவே அப்பாவுக்காக சில கதைகளை தயார் பண்ணி வைத்திருந்த ஐஸ்வர்யா அதில் ஒரு சிறந்த கதையை மெருகேற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளாராம். வை ராஜா வை தான் எதிர்பார்த்ததை விடவும் பெரிய ஹிட் படமாக அமைந்தால், தான் தயார் பண்ணி வைத்திருக்கும் ஸ்கிரிப்ட்டை அப்பா ரஜினியிடம் சொல்ல திட்டமிட்டுள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி