மலையாளத்தில் மம்மூட்டியின் மகன் துல்கர்சல்மான்-நஸ்ரியா நடிப்பில் தயாராகும் சலாலா மொபைல்ஸ் படத்தில் படம் முழுக்க துல்கர்சல்மானுடன் வருவது போன்ற வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மூலம் முதன்முறையாக மலையாளத்தில் என்ட்ரி கொடுத்துள்ள சந்தானம், கோயமுத்தூரைச்சேர்ந்த கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.
தமிழில் இதுவரை அவர் எந்த படத்திலும் நடிக்காத மாறுபட்ட கெட்டப்பாம். தமிழில் ஹீரோக்களுடன் நண்பன் என்ற போர்வையில் சரக்கு அடித்துக்கொண்டு சுற்றித்திரிபவராக நடித்து வரும் சந்தானத்துககு, மலையாளத்தில் வித்தியாசமான கேரக்டர் என்றதும் உடனே அட்ஜஸ்ட் பண்ணி கால்சீட் கொடுத்து விட்டாராம். துல்கர்சல்மான் தமிழுக்கு புதிது என்றாலும், சந்தானம், நஸ்ரியா ஆகிய இருவரும் இருப்பதால் இப்படம் தமிழிலும் வெளியாகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி