செய்திகள்,முதன்மை செய்திகள் குழந்தையை தத்தெடுக்க நர்சுக்கு அனுமதி…

குழந்தையை தத்தெடுக்க நர்சுக்கு அனுமதி…

குழந்தையை தத்தெடுக்க நர்சுக்கு அனுமதி… post thumbnail image
டில்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், 14 வயது சிறுமி, மர்ம நபரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதனால் கர்ப்பமடைந்த, அந்த சிறுமிக்கு, டில்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தையை வளர்க்கும் அளவுக்கு அந்த சிறுமிக்கு மன முதிர்ச்சியும், பொருளாதார வசதியும் இல்லை. இதையடுத்து, அந்த குழந்தையை பராமரித்த நர்ஸ் தன் வீட்டிலேயே குழந்தையை வளர்த்து வந்தார். ஆனாலும், குழந்தையை சட்டப்பூர்வமாக தத்தெடுத்து வளர்ப்பதற்கு, டில்லி கூடுதல் மாவட்ட கோர்ட்டில் அந்த நர்சும் அவரின் கணவரும் மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது : குழந்தையை பெற்ற தாய் அக்குழந்தையை வளர்க்க முடியாது என கைவிட்டு விட்டார். இந்த குழந்தையின் எதிர்கால பாதுகாப்புக்கு உறுதி தேவைப்படுகிறது. குழந்தையை தத்தெடுக்க அனுமதி கோரியுள்ள நர்சுக்கு அந்த குழந்தையை பற்றியும் அதன் பின்னணி குறித்தும் நன்றாக தெரியும்.

இந்த தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகி இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் இந்த குழந்தையை வளர்ப்பதற்கு இவர்களை விட, பாதுகாப்பான தம்பதி வேறு யாருமில்லை. எனவே, இந்த குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதற்கு இந்த தம்பதிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி அலோக் அகர்வால் தீர்ப்பளித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி