இதனால் மனம் நொந்து இளவரசனிடமிருந்து திவ்யா பிரிந்து சென்றார். தொடர்ந்து, இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு தர்மபரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஏற்கெனவே நடந்த இச்சம்பவங்களின் வடு மறையும் முன்னரே, தற்போது எம்.ஏ.பி.எட் படித்து ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் காதல்-கலப்பு திருமணம் செய்ததால் இண்டு காலனியில் மீண்டும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இளம் பெண்ணை ஒப்படைத்து விடும்படியும், அவர் பாட்டி வீட்டுக்குச் சென்று வந்ததாக ஊரில் சொல்லி சமாளித்து விடுவதாக கூறியும் அந்த இளம்பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் திருப்பி அனுப்பவில்லை. மாப்பிள்ளையின் உறவினர் காவல்துறை துணை ஆய்வாளராக இருக்கிறார்.
அவர் காதல்-கலப்பு மணம் செய்த ஜோடியை பிரிக்க கூடாது என்று கூறியிருக்கிறார். இதனால் இரண்டு காலனிகளுக்கிடையில் மீண்டும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டு பதட்டம் நிலவுகிறது. மோதலை தடுக்க அங்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி