ஆஸ்திரோலியாவின் மெல்போர்ன் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் மன்வீந்தர் சிங் தனது இரு நண்பர்களுடன் அங்குள்ள பிர்ரா ரங் பூங்காவின் நடைபாதையில் நின்றிருந்த போது ஆப்பிரிக்கர் போல் தோற்றம் கொண்ட 8 பேர் உள்பட ஒரு பெண்ணும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
சிங்கின் முகத்தில் குத்தி கீழே தள்ளி அருகிலிருந்த கட்டையை எடுத்து அவரை சரிமாரியாக தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பர்சை திருடிச் சென்றுவிட்டனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த அவர் அங்குள்ள ஆல்பிரட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவர் கோமா நிலையில் உள்ளதாகவும், ஆனால் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி