மத்திய பிரதேசத்தில், நான்காண்டுகளாக, தாயால், வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த, தீப்தி, 27, என்ற பெண், நேற்று விடுவிக்கப்பட்டார். அந்தப் பெண்ணின் தந்தை, நான்காண்டுகளுக்கு முன், இறந்து விட்டார்.
அந்த சோகத்தில் இருந்த தீப்தியின் தாய், மகளை வெளியே விடாமல், வீட்டிலேயே வைத்திருந்தார்.
அரசு ஊழியரான அந்தப் பெண், மகளை அடைத்து வைத்திருப்பதை, பக்கத்து வீட்டார், போலீசில் தெரிவித்தனர். அதன்படி நேற்று, தீப்தி மீட்கப்பட்டார். அவர், மெலிந்தும், நடக்க முடியாமலும் இருந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி