செய்திகள்,முதன்மை செய்திகள் ஜப்பான் தூதருக்கு சீனா கண்டனம்…

ஜப்பான் தூதருக்கு சீனா கண்டனம்…

ஜப்பான் தூதருக்கு சீனா கண்டனம்… post thumbnail image
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் யாசுகுனி புனித தலம் அமைந்துள்ளது. இதை போர் தியாகிகள் நினைவிடமாக கருதுகிறார்கள். ஆனால் சீனா, தென்கொரியா நாடுகள் அதை டோக்கியோ யுத்த ஆக்கிரமிப்பு சின்னமாக கருதி வெறுக்கின்றன. இந்த புனித தலத்திற்க்கு ஆட்சியாளர்கள் செல்வதை எதிர்க்கின்றன.

இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்த புனித தலத்திற்கு சென்றார். இதுபற்றி ஜப்பான் பிரதமர் அபே கூறுகையில், ‘எனக்கு சீனா, தென்கொரியா மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் உள்நோக்கம் எதுவும் கிடையாது’ என கூறினார். ஆனாலும் பிரதமரின் இந்த விஜயம் சீனா, தென்கொரியா அரசாங்கத்தை கோபம் அடைய செய்தது.

சீனாவில் பீஜிங்கில் இருக்கும் ஜப்பான் நாட்டு தூதரை வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ அழைத்து தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். அதுபோல தென்கொரியா கலை, சுற்றுலாத்துறை மந்திரி யூஜின்–ரியாங் கருத்து தெரிவிக்கையில், ‘ஜப்பான் பிரதமரின் இந்த நடவடிக்கை வேதனை தரக்கூடியது மற்றும் காலத்திற்கு ஏற்புடைய செயல் ஆகாது. வருந்தத்தக்க, ஆத்திரமூட்டும் நடவடிக்கை’ என குற்றம்சாட்டினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி