சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தை சேர்ந்தவர் லியாவோ (54) தொழிலாளி. இவர் ‘செஸ்’ விளையாடுவதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.இவர் தனது பக்கத்து வீட்டு 57 வயது நண்பருடன் ‘செஸ்’ விளையாடுவார். இந்த நிலையில் லியாவோவின் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே இவரது வீட்டின் அருகேயுள்ள காலி நிலத்தில் நண்பரின் பிணமும் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டு இருந்தார்.
அவரது பிணத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தற்கொலை செய்த லியாவோவின் பிணம் அருகே அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதம் இருந்தது.அதில், சொர்க்கத்துக்கு செல்லும் நான் அங்கு செஸ் விளையாட எனக்கு துணை தேவை. எனவே நான் தற்கொலை செய்வதற்கு முன்பு நண்பரை கொலை செய்து விட்டேன்.இனி நாங்கள் இருவரும் சொர்க்கத்தில் ஜாலியாக செஸ் விளையாடுவோம் என எழுதியிருந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி