சண்முகவல்லி திடீரென கடந்த 13–ந்தேதி காணாமல் போய் விட்டார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில், மொகிந்தர் பால் வீட்டில் அவரும், சண்முகவல்லியும் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாகக்கிடந்தது தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று அவர்களின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சண்முகவல்லியை மொகிந்தர் பால் கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி