அதன் அடிப்படையில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள்ள 4 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 3 கோடி ரூபாயும், ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள 10 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 3 கோடி ரூபாயும் , மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலுள்ள 8 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 2 கோடியே 50 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது .
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள 2 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 1 கோடியே 25 லட்சம் ரூபாய், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள 3 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 1 கோடி ரூபாய், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள 2 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 1 கோடியே 25 லட்சம் ரூபாய் என 12 கோடி ரூபாயும், மற்றும் பரமக்குடி, திருமங்கலம், சங்கரன்கோவில், அறந்தாங்கி, திருமயம், திருச்செந்தூர், பொள்ளாச்சி, அரக்கோணம், கள்ளக்குறிச்சி, குன்னூர், மன்னார்குடி, திருச்சி, திருச்செங்கோடு, பேரணாம்பட்டு, செய்யார், பென்னாகரம் ஆகிய 16 இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ஒவ்வொரு மருத்துவமனைக்கும் 50 லட்சம் ரூபாய்,என 8 கோடி ரூபாயும் என மொத்தம் 20 கோடி ரூபாய் செலவில் அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ஒப்புதல் வழங்கியும், நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்– அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி