இலங்கையில் விடுதலைப்புலிகள் கைவசம் இருந்த கிளிநொச்சி பகுதியை, கடந்த 2009ம் ஆண்டு நடந்த போருக்கு பின்னர் சிங்கள ராணுவம் கைப்பற்றியது.
இந்நிலையில் கிளிநொச்சி ராணுவ முகாமையும், அங்கிருந்த சாலைகள் மற்றும் போரில் சேதம் அடைந்த கட்டிடங்களையும் வாலிபர் ஒருவர் வீடியோவில் படம் பிடித்துக்கொண்டிருந்தார்.இதனைப்பார்த்த பாதுகாப்பு படைவீரர்கள் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவரது பெயர் அஜித்ரோகனா (வயது 24) என்பதும், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. சுற்றுலா விசாவில் இலங்கை வந்த அவர், விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்டு கொழும்பு குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி