நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அக்கம் பக்கத்தினர் அவர்களை தேடி குளத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் அணிந்திருந்த துணிகள் மற்றும் செருப்பு கரையோரத்தில் இருந்தது. அவர்களை காணவில்லை. தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட அவர்கள் பெருந்தல்மன்னா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் பெருந்தல்மன்னா மற்றும் மலப்புரம் தீயணைப்பு படைவீரர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். குளத்தில் இறங்கி 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் தேடும் பணி கைவிடப்பட்டது.
இதையடுத்து மலப்புரத்தில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் குளத்தில் இறங்கி நீண்ட தேடுதல் வேட்டை நடத்தினர். 2 பேரின் உடல்கள் ஒரு இடத்திலும் மற்றவர்கள் உடல்கள் ஒரு இடத்திலும் சேற்றில் சிக்கியிருப்பதை கண்டு பிடித்து 4 பேரின் உடல்களை மீட்டனர். உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்தல்மன்னா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி