ரஷியாவில் கட்டப்பட்ட ஆஸ்திரேலியாவின் பயணிகள் சொகுசு கப்பல் ஒன்று 50 சுற்றுலா பயணிகளுடன் தனது பயணத்தை மேற்கொண்டது. அதில் 20 ஊழியர்களும் உள்ளனர்.இக்கப்பல் அண்டார்டிகா கடல் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது கடும் குளிர் காரணமாக கடல் நீர் முற்றிலும் ஐஸ் கட்டியாக உறைந்தது.
எனவே அந்த கப்பல் ஐஸ் கட்டிகளுக்கு நடுவில் சிக்கி கொண்டது. அக்கப்பலால் தனது பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து அந்த கப்பல் அண்டார்டிகா கடலில் ஐஸ் கட்டிகளுக்கு இடையே மாட்டிக்கொண்டுள்ளது. அதனால் அதில் இருக்கும் பயணிகள் பலவித சிரமங்களுக்கு இடையே தவிக்கின்றனர். இதனால் அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.மீட்பு பணி விரைவில் முடுக்கி விடப்படும் என கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கான பணியும் நடக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி