செய்திகள்,முதன்மை செய்திகள் மைசூர் பருப்பு ..பீர்க்கங்காய்..சமையல் …

மைசூர் பருப்பு ..பீர்க்கங்காய்..சமையல் …

மைசூர் பருப்பு ..பீர்க்கங்காய்..சமையல் … post thumbnail image
மதிய வேளையில் புளிக்குழம்பு, மட்டன், சிக்கன் என்று செய்து சாப்பிடாமல் அவ்வப்போது பருப்புக்களை உணவில் சேர்த்து வந்தால் தான் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் இப்போது பருப்பு ரெசிபியில் ஒன்றான தேங்காய் மைசூர் பருப்பு மற்றும் பீர்க்கங்காய் கொண்டு செய்யப்படும் ஒரு அருமையான தால் ரெசிபியைப் பார்க்கப்போகிறோம். உண்மையில் இந்த தால் ரெசிபி மிகவும் சுவையாக இருப்பதோடு செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். அந்த ரெசிபியைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு – 225 கிராம் கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 1 நறுக்கியது பூண்டு மற்றும் கிராம்பு – 4 தட்டியது இஞ்சி – 1 இன்ச் தட்டியது சீரகப் பொடி – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன் தேங்காய் பால் – 400 மி.லி வெஜிடேபிள் ஸ்டாக் – 400 மி.லி தக்காளி – 4 பீர்க்கங்காய் – 1 துண்டுகளாக்கப்பட்டது கொத்தமல்லி – 3 டேபிள் ஸ்பூன் நறுக்கியது உப்பு – தேவையான அளவு.

செய்முறை ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயை குறைவில் வைத்து வெங்காயம் கிராம்பு சேர்த்து வதக்க வேண்டும். பின் ஒரு பௌலில் மைசூர் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி வெங்காயம் வதங்கும் வரை ஊற வைக்க வேண்டும்.பிறகு வாணலியில் இஞ்சி, பூண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்பு ஊற வைத்துள்ள பருப்பை நன்கு கழுவி வாணலியில் போட்டு தேங்காய் பால் வெஜிடேபிள் ஸ்டாக் சேர்த்து வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி தீயை குறைவில் வைத்து தட்டு கொண்டு மூடி பருப்பை நன்கு வேக வைக்க வேண்டும். அதற்குள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு பின் தக்காளியை அதில் போட்டு சிறிது நேரம் வைத்து பின் அதனை அடுப்பில் இருந்து இறக்கி குளிர்ச்சியான நீரில் அலசி தக்காளியின் தோலை நீக்கி விட்டு லேசாக மசித்து பின் அதனை பருப்பு வெந்ததும் வாணலியில் போட்டு, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். காயானது நன்கு வெந்துவிட்டால் வாணலியில் உள்ள பருப்பு மற்றும் காய் நன்கு மசிந்து கெட்டியாக ஆரம்பிக்கும். அப்போது சுவைப் பார்த்து வேண்டுமானால் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி பின் இறக்கி கொத்தமல்லியை தூவினால் சுவையான தேங்காய் தால் ரெசிபி தயார்….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி