செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் தொடந்து ஹிட் கொடுக்கும் பாக்சரான காமெடியன் …

தொடந்து ஹிட் கொடுக்கும் பாக்சரான காமெடியன் …

தொடந்து ஹிட் கொடுக்கும் பாக்சரான காமெடியன் … post thumbnail image
முதன் முறையாக ஜோடி சேரும் சிவகார்த்திகேயன் – ஹன்சிகா.

இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் மான் கராத்தே. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாசின் இணை இயக்குனராக இருந்த திருக்குமரன் இயக்குகிறார். ஏ.ஆர். முருகதாஸ் கதை திரைக்கதை எழுதுகிறார்.

இந்த ஆண்டில் தொடர்ச்சியாக ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நாயகனான சிவகார்த்திகேயன் இப்படத்தில் பீட்டர் என்ற பாக்சர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யாழினி என்ற அழகான பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துயிருக்கிறார் ஹன்சிகா.

சாதாரண ‘ஒல்லிபிச்சான்’ , எப்படி ‘பாக்சர்’ ஆகிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாம். கூடவே, காதலிலும் அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார்களாம்.

2014ல் முதல் படமாக வெளிவர இருக்கிறதாம் இந்த மான் கராத்தே என்று கூறுகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி