இரவு வரை ப்ரியா வீடு திரும்பாததால் எங்கு சென்றாளோ? என்கிற பதட்டத்துடன் உறவினர்கள் வீடுகளிலும், அவரது தோழிகளிடமும் போன் செய்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.அப்போது ப்ரியாவின் தந்தைக்கு மிரட்டல் போன் ஒன்று வந்தது. அதில் பேசிய வாலிபர், உங்கள் மகள் ப்ரியாவை நாங்கள்தான் கடத்தி வைத்துள்ளோம். ரூ. 50 லட்சம் கொடுத்தால் தான் அவரை உயிருடன் விடுவோம். இல்லையென்றால் ப்ரியாவை பிணமாகத் தான் பார்க்க முடியும் என்று கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.
இந்நிலையில் செவ்வாயன்று காலையில் ப்ரியாவின் தந்தை பணத்தை கொண்டு வந்து தருவதாக கடத்தல் கும்பலிடம் தெரிவித்தார். அப்போது ராமாபுரத்துக்கு வந்து பணத்தை கொடுக்குமாறு கூறினர். இதையடுத்து கடத்தல் கும்பல் பணத்தை வாங்கும்போது காவல்துறை பிடியில் சிக்கினர்.இதுதொடர்பாக பழனிச்சாமி, லோகநாதன், ராஜாமணி, முருகன், அஜய் ஆகிய 5 பேரை காவல்துறையினர் பிடித்தனர். இவர்கள் ப்ரியாவை கடத்திச் சென்று பெருங்களத்தூரில் ஒரு வீட்டில் சிறை வைத்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ப்ரியாவை மீட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி