செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மறைந்த ஈயம் பித்தலை பேரிச்சை பழம் …

மறைந்த ஈயம் பித்தலை பேரிச்சை பழம் …

மறைந்த ஈயம் பித்தலை பேரிச்சை பழம் … post thumbnail image
உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் குள்ளமணி நேற்று இரவில் மறைந்தார்.

கரகாட்டக்காரன் பில்லா இணைந்த கைகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் குள்ளமணி. அவருக்கு 65 வயதாகும் குள்ளமணி கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலன்யின்றி நேற்று இரவு 9 மணிக்கு அவர் இறந்தார். .

அவருடைய உடல் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள மரமடக்கி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வியாழக்கிழமை அன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படயுள்ளது.

நகைச்சுவை நடிகர் குள்ளமணிக்கு ராணி என்ற மனைவியும் மகாலட்சுமி என்ற ஒரு மகளும் உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி