செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் தங்கத்தின் மவுசு குறைந்தது …

தங்கத்தின் மவுசு குறைந்தது …

தங்கத்தின் மவுசு குறைந்தது … post thumbnail image
2013-ம் ஆண்டில் பங்குச் சந்தை முதலீடுகளுக்கு 9 சதவீத லாபம் கிடைத்துள்ளது. அதேசமயம் தங்க முதலீடுகளுக்கு 3 சதவீதம் மட்டுமே லாபம் கிடைத்துள்ளது. அதே சமயம் வெள்ளி 24 சதவிகிதம் வரைக்கும் சரிந்துவிட்டது.தங்கத்தில் முதலீடு செய்தது லாபகரமானதாக அமையாததற்குக் காரணம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததே காரணம்.

மேலும் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் தங்கத்தின் மீதான முதலீடு லாபகரமானதாக அமையவில்லை. அதேசமயம் பங்குச் சந்தைகள் வழக்கம்போல சரிவிலிருந்து மீண்டு முதலீட்டாளர்களுக்கு லாபகரமாக அமைந்ததாக ரெலிகரே செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் சில்லறை விநியோகப் பிரிவின் தலைவர் ஜெயந்த் மாங்கலிக் தெரிவித்துள்ளார்.

பொதுவாக பங்குச் சந்தையும், தங்கமும் எதிரெதிர் முகாமிலிருப்பவை. பங்குச் சந்தை லாபமீட்டும்போது, தங்கம் லாபகரமானதாக அமையாது. இந்த ஆண்டும் இது விதிவிலக்காக அமையவில்லை என்றும் கூறினார்.தங்கத்தின் விலை 10 கிராம் ரூ. 30,990-லிருந்து ரூ. 30,160 ஆகக் குறைந்துவிட்டது. இதேபோல வெள்ளியின் விலை கிலோ ரூ. 57,000-லிருந்து ரூ. 43,500 ஆகக் குறைந்துவிட்டது.

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள பொதுதேர்தல் போன்ற காரணங்களாலும் இந்திய பங்குச் சந்தையில் வெளிப்புற பாதிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. தங்கம் விலை குறைந்ததால், எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைப்பதற்காக, இறக்குமதி தங்கம் மீது 10 சதவீதம் சுங்க வரி விதிப்பு, கட்டுப்பாடுகள் அதிகரிப்பு, வங்கிகள் தங்கம் இறக்குமதி விதிக்கப்பட்ட தடைகள் இப்படி பல்வேறு காரணங்களால் தங்கம் விலை குறைந்தது என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெளிநாட்டு பிரச்சினைகள் பங்குச் சந்தையை பாதித்தாலும் இரண்டாவது பிற்பாதியில் இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி