க்ரீன் ஆப்பிள் ஒன்றை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும், அதில் எலுமிச்சைச்சாறு ஒரு டேபிள் ஸ்பூன் விட்டு கலந்து வைக்கவும்.
வெங்காயம் ஒன்றை துண்டுகளாக நறுக்கவும். சிறிது பூண்டு மற்றும் இஞ்சியை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை லேசாக வதக்கவும். இஞ்சி, பூண்டு கலக்கவும். லேசாக வதங்கிய பின், ஆப்பிள் துணடுகளையும் சேர்த்து, கிளறி விடவும்.
ஆப்பிள் முழ்கும் வரை தண்ணீர் விட்டு வேக வைக்கவும். நன்றாக மசித்துவிடவும்.
மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், சர்க்கரை ஒரு டீஸ்பூன்,வெந்தயத்தூள் 1/2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது),ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது),தேவைகேற்ப உப்பு போட்டு கலந்து அடுப்பில் இருந்து இறக்கவும். சுவையான ஆப்பிள் க்ரீன் சட்னி தயார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி