செய்திகள்,முதன்மை செய்திகள் வரதட்சனை 10 லட்சம் லைக் …

வரதட்சனை 10 லட்சம் லைக் …

வரதட்சனை 10 லட்சம் லைக் … post thumbnail image
ஏமன் நாட்டின் தயீஷ் என்ற இடத்தை சேர்ந்தவர் சலீம் ஆயாஷ், கவிஞர். இவர் தனது மகளை திருமணம் செய்து கொடுக்க முன் வந்தார். இதற்காக மணமகனிடம் வித்தியாசமான வரதட்சணையை கேட்டுள்ளார்.

தனது மருமகனாக வரப்போகிறவர் பேஸ்புக்கில் 10 லட்சம் லைக் வாங்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுதான் தனது பெண்ணை மணப்பதற்காக மணமகன் கொடுக்க வேண்டிய வரதட்சணை என்றும் தெரிவித்துள்ளார்.இதற்காக மணமகன் ஒரு மாதமோ, ஒரு வருடமோ பல வருடமோ அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் சலுகை அளித்துள்ளார்.

இவரது இந்த செய்தியை தனது பேஸ்புக் இணையதளத்திலும் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த பலர் சலீமுக்கு லைக் கொடுக்க தொடங்கிஉள்ளனர். இதுவரை 30 ஆயிரம் லைக் விழுந்துள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி