இதனால் கார் ஜன்னல் கண்ணாடிகளை கபாடியா இறக்கி விட்டார். அப்போது ஒரு சொகுசு காரில் வந்த நபர், கபாடியாவின் காரின் அருகே தனது காரை உரசியபடி நிறுத்தினான். பின்னர், அந்த நபர் கபாடியாவிடம், நீங்கள் பேஸ்புக்கில் இருக்கிறீர்களா? நான் உங்களுடன் பேஸ்புக் நண்பராகலாமா? என்று கேட்டு நச்சரித்துள்ளார்.கபாடியா மறுத்தபோதும் விடாமல் அவருடன் பேச விரும்புவதாக அந்த நபர் கூறியுள்ளார். இதனால் அவரை போட்டோ எடுத்த கபாடியா, பேசாமல் சென்றுவிடும்படி கூறியுள்ளார்.
இந்த மிரட்டலுக்கும் பயப்படாத அந்த நபர் மீண்டும் தொந்தரவு கொடுத்தார். பின்னர் அவர் தனது செல்போனை எடுத்து உதவிக்கு சிலரை அழைத்ததும், அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.இதையடுத்து சாகு நகர் காவல் நிலையத்தில் கபாடியா புகார் அளித்தார். மேலும் தனக்கு தொந்தரவு கொடுத்த நபரின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு, தான் சந்தித்த பிரச்சினை குறித்து விவரித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி