சென்னை : ஜனவரி 1ம் தேதி பிறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவோரின் வசதிக்காக சென்னை மாநகர போக்குக்வரத்துகழகம் இரவு முழுவதும் 150 பேருந்துகளை இயக்கக முடிவு செய்துள்ளது. சென்னையில் டிசம்பர் 31ம் தேதி இரவுமுதலே கூட்டம் களை கட்டியிருக்கும். குறிப்பாக கடற்கரை பகுதிகளில் கூட்டம் அலைமோதும் அளவுக்கு இருக்கும்.
அதிகாலையில் இருந்தே அனைத்துக் கோவில்களுக்கும் பஸ் வசதி உண்டு வடபழனி முருகன் கோயில், மயிலை கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில், திருவேற்காடு, திருநீர்மலை, மாங்காடு, குன்றத்தூர் மற்றும் சாந்தோம், பெசன்ட்நகர் சர்ச் உள்ளிட்ட வழித்தடங்களில் பொது மக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி பகல் 12 மணி முதல் 1ம் தேதி மாலை வரை வழக்கமாக ஓடும் பஸ்களை காட்டிலும் கூடுதலாக நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் தேவையான பகுதிகளுக்கு விடியவிடிய மாநகர பஸ்கள் இயக்கப்படும்.
டிசம்பர் 31ம் தேதி மட்டுமல்லாமல் மக்கள் வசதிக்காக அடுத்த நாளும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும், புறநகர்ப் பகுதிகளுக்கும் சிறப்புப் பஸ்களை இயக்கவுள்ளது போக்குவரத்துக் கழகம்.
ஜனவரி 1ம் தேதி மகாபலிபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல பகுதிகளிக்கும்,சுற்றுலாத் தலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு சென்னை போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி