வீரம் படம் ஹிட்டானால் தனது சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில் இருக்கிறாராம் தமன்னா. கோலிவுட்டில் டாப் கியரில் சென்ற போது தமன்னாவின் மார்க்கெட் திடீர் என்று சரிந்தது. ஒரு கட்டத்தில் கோலிவுட்டில் காணாமல் போயிருந்த தமன்னா, தாற்போது தான் அவருக்கு அஜீத்தின் வீரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வீரம் படத்தை நடித்து முடித்துள்ள அவருக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துள்ளது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய தமன்னாவின் மார்க்கெட் தாற்போது அவரது சம்பளம் குறைந்துவிட்டது. இந்நிலையில் வீரம் படம் ஹிட்டானால் கோலிவுட்டில் தனது சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளாராம் தமன்னா. வீரம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று அவர் உறுதியாக நம்புகிறார் தமன்னா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி