அதேபோல்தான், சூப்பர் ஸ்டார் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று பூரண குணமடைந்து விட்டு சென்னை திரும்பியபோதும், சில இயக்குனர்கள் அவரை நோக்கி படையெடுத்தனர். அப்படி சென்றவர்களில் கே.வி.ஆனந்த் சொன்ன கதையையும் கேட்டார் ஆனால், இன்று வரை அந்த கதை பற்றி எஸ் ஆர் நோ சொல்லவில்லையாம்.
ஆனபோதும் பல மாதங்களாக நம்பிக்கையோடு காத்திருந்த அவர், பின்னர் ரஜினியிடமிருந்து க்ரீன் சிக்னல் விழும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார். அதையடுத்து அவரது மருமகன் தனுஷை புக் பண்ணி அநேகன் என்ற படத்தை தொடங்கி விட்டார்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார்க்காக உருவாக்கிய கதைக்கு வேறு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார்கள் என்று ஆராய்ந்த கே.வி.ஆனந்த், இப்போது அந்த கதையை அஜீத்தை சந்தித்து கூறியுள்ளதாக ஒரு தகவல் வெளி வந்துள்ளது.
வருகிற பிப்ரவரியில் கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கும் அஜீத், அதை முடித்ததும் நடித்துத்தருவதாக கே.வி.ஆனந்திடம் கூறியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி