வாணி போஜனின் அழகு சினிமா வாய்ப்புகளை கொண்டு வந்தாலும் இன்னும் அதற்கு ஓகே சொல்லாமல் இருக்கிறார். ஏன் என்பதற்கு அவர் விளக்கமும் தருகிறார்.
விமான பணிப்பெண்ணாக வேலை செய்யும்போதே சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்தது. அதனால்தான் வேலை நேரம் போக மீதி நேரங்களில் மாடலிங் செய்து வந்தேன். திடீர்னு வேலையிலிருந்து விலகி வந்ததும் உடனே கிடைச்சது டி.வி.சீரியல்தான் சினிமாவை அப்புறம் பார்துக்கலாமுன்னு டி.வி.க்கு வந்ததுட்டேன். சினிமாவுல நடிக்கிறதுக்கு கொஞ்சம் அனுபவம் வேணும்னு புரிஞ்சுக்கிட்டு இப்போ சினிமாவை ஸ்டடி பண்ணிக்கிட்டிருக்கேன். சினிமால நடிக்கிறதுக்கு என்னை தயார்படுத்திக்கிட்டிருக்கேன். இனி சினிமால நடிக்கலாமுன்னு எனக்கே தன்னம்பிக்கை வந்த பிறகு சினிமால நடிப்பேன்,என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி