இதய பாதிப்பில் பாதிக்கப்பட்ட பிரான்சில் ஒரு நபருக்கு முதன்முறையாக செயற்கை இதயம் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த இதயம் 5வருட ஆயுட்காலத்தை நீட்டிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்சு மருத்துவர்கள் லித்தியம் அயான் பேட்டரிகள் மூலம் இயங்கும் செயற்கையான மனித இதயத்தை உருவாக்கினார்கள். உயிருள்ள உறுப்பை போன்று இயங்கும் இந்த செயற்கை இதயம் 5 வருடங்கள் வரை ஒருவரின் ஆயுளை நீட்டிக்க செய்யும் என்று கூறுகின்றன.
இந்த இதயத்தை உடலுக்கு வெளியில் பொருத்தியும் இயங்கச்செய்ய முடியும் என்றும் தெரிவித்தனர். இந்த செயற்கை இதயத்தை முதல் முறையாக பிரான்சில் உள்ள ஒரு மருத்துவமனையில் 75 வயது முதியவருக்கு பொருத்தி வெற்றிகரமாக இயங்க செய்தனர்.
ஒரு கிலோ கிராம் எடைக்கு குறைவான ஆரோக்கியமான இந்த செயற்கை மனித இதயம் அனைவராலும் பாராட்டு பெற்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி