இந்த பேரணியில் மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் இருந்து குறைந்த பட்சம் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் மற்றும் திரளமான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனையடுத்து பா.ஜ.க சார்பில் மத்திய மண்டல ரயில்வே மற்றும் மேற்குமண்டல ரயில்வே நிர்வாகத்தின்மூலம் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.
சிறப்பு ரயில்கள்:
பா.ஜ.க பேரணியை முன்னிட்டு மத்திய ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து 12 ரயில்களும், மேற்கு மண்டல ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து 10 ரயில்களையும் இயக்க முடிவு செய்துள்ளது.
இன்று முதல் 23-ம் தேதி வரையில் இந்த ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் ஒவ்வொன்றும் 18 பெட்டிகள் கொண்டவையாகவும் இவைகளில் 1 ஏசி, 2-ஏசி, 3-ஏசி வகுப்புகள் கொண்ட பெட்டிகள் மற்றும் சிலீப்பர் வகை பெட்டிகளும் உள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 200 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும் எனவும். இந்த ரயில் பயணங்களால் மற்ற பயணிகள் ரயில் சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ம.பி. ஆகிய மாநிலங்களில் இருந்தும் பா.ஜ.க, தொண்டர்கள் பேரணியில் கலந்து கொள்கின்றனர் எனவும் அவர்களுக்காகவே இந்த சிறப்புரயில் இயக்கப்படுவதாவும் பா.ஜ.க, வெளியிட்டு்ள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி