அதைக்கண்ட சுப்பிரமணியும் வாலிபருடன் சண்டை போட்டார். இதில் தவறி கீழே விழுந்த அந்த வாலிபர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். மானத்தை காக்க நடந்த போராட்டத்தில் அந்த சாவு, கொலை வழக்காக மாறியதால் கணவன்,மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள், மேல்முறையீடு செய்யவும், தொடர்ந்து வழக்கை நடத்தி செல்ல வும் முடியாததால் சுப்பிரமணி வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், விஜயா, வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் தண்டனையை அனுபவித்தனர்.
இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த தகவல் சக கைதிகள் மூலம் வெளியில் கசிய, அவருக்காக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கோர்ட்டில் 2011ல் வழக்கு தொடர்ந்து அதன் மீதான தீர்ப்பில் விஜயாவை கோர்ட் விடுதலைசெய்தது.நேற்று காலை சிறையிலிருந்து விடுதலையான விஜயா, தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், அரியூர் மகளிர் விடுதியில் தஞ்சமடைந்துள்ளார். ஒரு பெண் தன் மானம் காக்க கை நகங்களை பயன்படுத்தலாம் என காந்தி சொன்னார். ஆனால் தன் மானம் காத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது கூறிப்பிடத்தக்கது.
இது நியாயமா என மக்கள் கேட்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி