செய்திகள்,முதன்மை செய்திகள் காப்பாற்றப்பட்ட அறிய வகை ஆமை முட்டை …

காப்பாற்றப்பட்ட அறிய வகை ஆமை முட்டை …

காப்பாற்றப்பட்ட அறிய வகை ஆமை முட்டை … post thumbnail image
காரைக்கால் கடலோர காவல் நிலைய ஆய்வாளர் மர்த்தினி, உதவி காவல் ஆய்வாளர் பிரவின் குமார், துணை உதவி காவல் ஆய்வாளர்கள் மோகன், குமரன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்ற போது, மண்டபத்தூரை அடுத்த அக்கம்பேட்டை மீனவகிராமத்தில் மீனவர்கள் சிலர் நண்டுக்காக குழி தோண்டிய போது, அரிய வகை ஆலிவ்ரெட்லி ஆமையின் முட்டைகள் கண்டறியப்பட்டன. அதனை உரிய நேரத்தில் கண்ட கடலோர காவலர் 114 ஆமை முட்டைகளை மீட்டு, கூடுதல் வேளாண் இயக்குனர் மதியழகன், வனத்துறை அதிகாரி தண்டபாணி ஆகியோர் வசம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, அந்த ஆமை முட்டைகள் பாதுகாக்கப்பட்டு, காரைக்கால் கருக்களாச்சேரி மீனவ கிராமத்தின் கடற்கரை மணலில் ஒன்றரடி அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு புதைக்கப்பட்டன. இது குறித்து, வன அதிகாரி தண்டபணி கூறியதாவது,

“மாவட்ட கடலோர காவலர் உதவியோடு கடற்கரை ஓரத்தில் மரங்களை பாதுகாத்து வருகிறோம். இன்று அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகளை எங்களிடம் ஒப்படைத்தனர். அதனை கூடுதல் வேளாண் இயக்குனர் மதியழகன் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பாக கடற்கரை மணலில் மீண்டும் புதைத்துள்ளோம். இந்த முட்டை 52 நாளில் குஞ்சு பொரிக்கும். இந்த முட்டையை எடுத்துசெல்ல பலர் காத்திருப்பதால், மீனவ கிராம பஞ்சாயத்தார் உதவியுடன் வாரம் ஒரு முறை புதைக்கப்பட்ட முட்டையினை ஆய்வு செய்ய ஊழியர்களை நியமித்துள்ளோம். குஞ்சு பொரித்தவுடன் அதனை பாதுகாப்பாக மீண்டும் கடலில் கொண்டு சென்று விடவும் ஏற்பாடுகள் செய்து வருகிறோம்” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி