இதையடுத்து பாதிரியார் ஆலோசனையின் பேரில் மாணவியின் பெற்றோர் நெல்லை டவுனில் உள்ள ஒரு டாக்டரிடம் மாணவியை அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர். மாணவியின் வயிற்றில் இருந்த 5 மாத சிசுவை, பேட்டை ஆதம் நகர் அருகே உள்ள காட்டில் புதைத்தனர். இந்த விவரம் வெளியில் தெரியவரவே, மாணவியின் தந்தை நெல்லை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் செல்வன், கருக்கலைப்பு செய்த டாக்டர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் தேடுவதையறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர். போலீஸ் விசாரணையில் பாதிரியார் செல்வன் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாதிரியார் செல்வன் மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரது பங்களாவில் வேலை செய்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அவரது உதவியாளரிடம் விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. மேலும் புதைக்கப்பட்ட சிசுவின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பரிசோதனை நடந்தது. இதில் புதைக்கப்பட்டது ஆண் சிசு என்பது தெரியவந்தது.தலைமறைவாக உள்ள பாதிரியாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் பாதிரியார் செல்வன் நேற்று மாலை சரண் அடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி