சென்னையில் நேற்று ஒரு நாள் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டார் பிரணாப் முகர்ஜி. அவரது வருகைக்கு எதிர்த்து மாணவர் அமைப்பினர் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதற்கு சினிமா டைரக்டர் கவுதமன் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். இதனால் டைரக்டர் கவுதமன் நேற்று முன்தினம் நள்ளிரவு முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார்.
அவருடன் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் உள்பட மொத்தம் 7 பேர் கைதாகி, நேற்று மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையானவுடன் டைரக்டர் கவுதமன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், எங்களுக்கு போலீசார் பெரும் தொல்லை கொடுத்ததகவும், 2 இடங்களில் மாற்றி, மாற்றி உட்கார வைத்தனர். எங்களோடு கைதானவரை அடித்து துன்புறுத்தினார்கள். இதுதொடர்பாக மனித உரிமை கமிஷனில் புகார் கொடுக்க உள்ளோம் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி