செய்திகள்,முதன்மை செய்திகள் கடத்தப்பட்ட மாணவி …

கடத்தப்பட்ட மாணவி …

கடத்தப்பட்ட மாணவி … post thumbnail image
தேனி பாரஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் கவுரி (வயது 19). இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் கவுரி சொந்த ஊருக்கு வந்திருந்தார்.சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மாயமாகி விட்டார். அதிர்ச்சி அடைந்த சேகர் மகளை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் அவர் கிடைக்காததால் தேனி டவுண் போலீசில் புகார் செய்தார்.

புகாரில் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற எனது மகள் கவுரி மாயமாகி விட்டார். அவரை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி